மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 16 January 2024

மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி.


மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில், தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

மேட்டுப்பட்டி ரூபன்&கோ மோகன் சார்பில் முதல் பரிசு ரூபாய் 6,001 வழங்கப்பட்டது. மேட்டுப்பட்டி திமுக கிளைச் செயலாளர் விஜயன் சார்பில் இரண்டாவது பரிசாக 5,001 வழங்கப்பட்டது. ஊராட்சிச்செயலர் தெய்வேந்திரன் சார்பில் 4,001 மூன்றாவது பரிசும், மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் சார்பில் 3,001 நான்காவது பரிசும் வழங்கப்பட்டது. மற்றும் மாணிக்கம்பட்டி ரத்னாஸ் சார்பில் கோப்பைகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை, 66,மேட்டுப்பட்டி சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad