திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா, தேசிய இளைஞர் நாள் விழாவில் இளவட்ட கல்லை அசாதரணமாக தூக்கி போட்ட மாணவர்கள்.சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவ மாணவிகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 13 January 2024

திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா, தேசிய இளைஞர் நாள் விழாவில் இளவட்ட கல்லை அசாதரணமாக தூக்கி போட்ட மாணவர்கள்.சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவ மாணவிகள்.


மதுரை, திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில், கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

இவ்விழாவில், பானை உடைத்தல், இளவட்டக்கல் தூக்குதல், பலூன் உடைத்தல் , போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவ மாணவிகள் அதன் பின்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கொடைக்கானல் அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலா சிறப்புரை ஆற்றினார். கல்லூரித் தலைவர் ராஜகோபால் , உப தலைவர் ஜெயராம் கல்லூரி முதல்வர் விஜயராகவன் பொருளாளர் ஆழ்வார் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad