சோழவந்தான் அருகே, கோவில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நடந்தது. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு கிராமத்திற்கு, சித்திரத வல்லபபெருமாள் கிராமத்தில் உள்ள தானத்தில் எழுந்தருளி இங்கு மூன்று நாள் திருவிழா கிராமத்தார்கள் சார்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடை பெறக்கூடிய வைகுண்ட ஏகாதசி திருவிழா கோவில் வளாகத்தில் நடந்தது.

உபயோதாரர் கன்னியப்பன் முதலியார் குடும்பத்தினர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள். கூடுதல் பொறுப்பு நிர்வாக அதிகாரி சரவணன், பணியாளர்கள் நாகராஜ், மணி ஏற்பாடுகளை செய்திருந்தனர் . அர்ச்சகர்கள் சடகோபன் என்ற பாலாஜி ரங்கநாதன், பாலாஜி சௌமிய நாராயணன், கோவிந்த மூர்த்தி ஆகியோர் அபிஷேகங்கள் செய்தனர். வருவாய்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோரும் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment