மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் கடந்த புதன்கிழமை சனி பெயர்ச்சி நடைபெற்றது. அதனை ஒட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது இந்நிலையில் இன்று திருமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முத்துராமலிங்கம் சாமி தரிசனம் செய்தார். கோவில் அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கினார். சங்கங்கோட்டை சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment