ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 20 December 2023

ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு.


திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அச்சம்பட்டி கிராம்.இந்த கிராம ஊரணி கால்வாய் வழியாக திரளான கண்மாய்க்கு தண்ணீர் செல்லும்.இந்த நிலையில் தற்போது திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த நான்கு தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பூசலபுரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர் கவுண்டமா நதி ஓடை வழியாக பூசல் புரம், சினுகாபட்டி செளடார்பட்டி, நடுவகோட்டை, அச்சம்பட்டி வழியாக திரளான கண்மாயை சென்று அடையும். அதிகப்படியான நீர் நடுவக்கோட்டையில் பிரிந்து திரளான பாலம் வழியாக பல்வேறு கண்மாய்களை சென்று அடையும். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் அச்சம்பட்டி ஊரணி வழியாக சென்ற நீர் தரணியில் உள்ள கரை தாழ்வாக இருந்ததால் கரையின் மேலே உடைப்பு ஏற்பட்டு மழைநீர் ஊருக்குள் புகுந்தது. நேற்று முன் தினம் இரவு திரளி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கரையை பலப்படுத்தினர். இருப்பினும் நேற்று இரவு அப்பகுதியில் பெய்த மழை தண்ணீர் புகுந்தது. உடனடியாக இளைஞர்களும்  ஊராட்சி மன்ற தலைவர் பாபு மல்லிகா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களும். பொதுமக்களும் சேர்ந்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கரையை அடைத்து தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தியதால் பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad