துவரிமான் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 11 December 2023

துவரிமான் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.


மதுரை மாவட்டம், துவரிமான் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென் மண்டலர் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட திருமாவளவன் பின்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது, விடுதலைக் கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 29 திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற இருக்கிறது.

இதில்,  முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைவர்  மல்லிகா அர்ஜுன் கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் எச்சூரி,  கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தோழர் டிபங்கர் பட்டாச்சாரியார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.


இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்ற ஒரு மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த மாநாடு அடித்தளம் அமைப்பதாக அமையும் என்று நம்புகிறோம், தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமையும் ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து சனாதன சக்திகளை வீழ்த்துகின்ற ஒரு தேர்தலாக இந்த தேர்தல் அமைகின்ற சூழலில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


சென்னையில் புயலால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள முடியவில்லை  அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் என்று அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர். 5000 கோடி பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என, முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை  மத்திய அரசு ஏற்கவில்லை. ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


இது போன்ற தருணங்களில் மாநில அரசை விமர்சிப்பது என்பதை அதிமுக போன்ற கட்சிகள்கைவிட வேண்டும். பேரிடர் நிவாரண நிதியை தமிழ்நாடு அரசு கூறியுள்ள படி  மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்று, எதிர் கட்சிகளும் சேர்ந்து வலியுறுத்த வேண்டும். இந்த பேரிடர் நேரத்திலும் ஆளுங்கட்சியை விமர்சிப்பதும் அரசியல் ஆதாயம் தேடுவதும் மிகவும் அற்பமான அரசியல் அது மக்களுக்கு எதிரான அரசியல் இந்த நேரத்தில் மக்களுக்கு நேர்ந்திருக்கின்ற துன்பம் தான் முன்னிறுத்தப்பட வேண்டும். ஆளுங்கட்சியை விமர்சித்து அதில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பது நேர்மறையான பொறுப்புணர்வோடு கூடிய அணுகு முறையாக இருக்காது. 


கருப்பு பணம் யாரிடமிருந்தாலும் அதனை கைபற்ற வேண்டும் அது எந்த கட்சி என்பது பிரச்சனை இல்லை அயல்நாடுகளில் குவிக்கப்பட்டு இருக்கின்ற கருப்பு பணத்தை கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்குறுதி கொடுத்த மோடி அவர்கள் இதுவரையும் அதைப்பற்றி வாய் திறக்கவில்லை ஆளுங்கட்சி சார்ந்தவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கக்கூடிய தொழில் அதிபர்கள் யாரையும் இதுவரை வருமானவரித்துரையோ அமலாக்க துறையோ விசாரித்தாக எந்த தகவலும் இல்லை  எதிர்க்கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்குவதற்கு  ஒன்றிய அரசு இந்த துறைகளை எல்லாம் கைக்குள்ளேயும் கட்டுக்குள்ளேயும் வைத்திருக்கிறார்கள் இது மிகவும் வேதனைக்குரியது கண்டிக்கத்தக்கது. 


அது காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்கள் கைகளில் கருப்பு பணம் இருந்தால், கைப்பற்றுவது அவசியமானது தான் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தந்த மாநிலங்களில் சூழல்களை பொறுத்து மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள். இது தேசிய பார்வையோடு நடந்த தேர்தல் அல்ல மோடியா ராகுல் காந்தியா என முன்னிறுத்தப்பட்ட தேர்தல் அல்ல ராஜஸ்தானில் உள்ள பிரச்சனைகள் வேறு மத்திய பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகள் வேறு சதீஷ்கரியில் உள்ள அரசியல் சூழல்கள் வேறு   தெலுங்கானாவில் உள்ள சூழல்கள் வேறு எனவே மாநிலங்களுக்கு மாநிலம் பிரச்சனைகள் வெவ்வேறாக இருக்கன்ற சூழலில் அங்கு உள்ள மாநில தலைவர்கள் மக்களிடையே பெற்ற செல்வாக்கு ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

 

அதனை, நாடாளுமன்ற தேர்தலோடு பொருத்துவது சனாதனம் குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் பேசியதால்தான் காங்கிரஸ் தோற்றது என்று விமர்சிப்பது உண்மையை மறைப்பதாகும். அது ஒருபோதும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad