திருமங்கலம் நகராட்சி மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கருத்துக் கேட்கும் முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 18 December 2023

திருமங்கலம் நகராட்சி மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கருத்துக் கேட்கும் முகாம் நடைபெற்றது.

photo_2023-12-18_15-39-15

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிளில் வரி சம்பந்தமாக பெயர் மாற்றம் பெயர் நீக்கம் ஆகியவைகளுக்கான கருத்து கேட்கும் முகாம் நடைபெறும் என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 27 வார்டுகளில் மக்களுடன்  முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கருத்துக் கேட்கும் முகாம் இன்று 10,11,12,13வார்டுகள் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த கருத்து கேட்கும் முகாமில் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் சொத்துவரி, தண்ணீர் வரி, தொழில் வரி மின்இணைப்பு புதியது முகவரி மாற்றம் பெயர் மாற்றம் ஆகியவற்றிற்கான கருத்து கேட்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, சமுக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad