மதுரையிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வெள்ள நிவாரண பொருட்களை மதுரை எம். பி. வெங்கடேசன் பார்வையிட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து 63 முறை சுமார் 48 ஆயிரத்து 763 கிலோ எடையள்ள உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
மதுரை விமான நிலையத்திலிருந்து, இந்தியவிமானப்படை, கடலோர காவல் படை மற்றும் கப்பற்படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து 63 முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 48ஆயிரத்து 7 நூற்று 63 கிலோ உணவுப் பொருட்கள் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் , மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையம் பகுதியில் இருந்து தூத்துக்குடி வெள்ள நிவாரண பணிக்காக கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களை இன்று காலை பார்வையிட்டார்.
No comments:
Post a Comment