கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு, நேரில் பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 15 December 2023

கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு, நேரில் பார்வையிட்டு ஆய்வு.


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகளை,  பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து,   பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-  தமிழ்நாடு முதலமைச்சர்  தளபதியார், திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் பாரம்பரியமான பல்வேறு அடையாளங்களை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  அந்த வகையில், தமிழகத்தின் தென்பகுதியில் ஜல்லிக்கட்டு என்கின்ற வீரவிளையாட்டு தமிழர்களின் அடையாளமாக விளங்குகிறது. 


தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டமன்ற விதி 110-ன் கீழ்  ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கென்று  நிரந்தரமாக ஒரு அரங்கம் அமைக்கப்படும் என்று  சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்கள்.  


அதன்படி,   தமிழ்நாடு முதலமைச்சர்  தளபதியார் ,  ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகளை  18.03.2023-அன்று  தொடங்கி வைத்தார்கள்.  இந்த அரங்கம் 77,683 சதுரஅடி பரப்பளவில், ஏறத்தாழ ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.  ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானக் கட்டடமானது  பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர்களின் கண்காணிப்பில் மிக அழகாகவும், நேர்த்தியாகவும், தரமாகவும்  அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் நபர்கள் அமரந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில்  இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த அரங்கில், பிரம்மாண்ட நுழைவுவாயில் தோரணம், 50 ஆயிரம் கொள்ளலவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தரைதள நீர்தேக்க தொட்டி, காளைகள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கான ஓய்வு கூடங்கள்,  நிர்வாக அலுவலகம்,  பத்திரிகையாளர்களுகான ஓய்வு கூடம், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும்  சிகிச்சை மையங்கள், அருங்காட்சியகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, தற்காலிக விற்பனை கூடம்  என, பல்வேறு வசதிகளுடன் பொதுப்பணித்துறையின் மூலம் இந்த அரங்கம் சிறப்பாகவும்,  தரமாகவும் கட்டப்பட்டு வருகிறது. 


இக்கட்டுமானப் பணிகள் 97 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.  வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட்டவுடன் தமிழ்நாடு முதலமைச்சர், இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்று , பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது,  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள்) பிரதீப் யாதவ்,  மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் , கண்காணிப்புப் பொறியாளர் மாரிமுத்து ராஜன்,  கோட்டப்பொறியாளர் சந்திரன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.பி.சத்திய மூர்த்தி, தலைமைப் பொறியாளர் மதுரை மண்டலம் எஸ்.ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் ஆர்.வெங்கடாசலம், செயற்பொறியாளர் வி.செந்தூர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad