திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தில் இரண்டு நூலகங்கள் இருக்கு ஆனால் இரண்டு நூலகமே இப்போது மூடப்பட்டு இருக்கிறது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 12 December 2023

திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தில் இரண்டு நூலகங்கள் இருக்கு ஆனால் இரண்டு நூலகமே இப்போது மூடப்பட்டு இருக்கிறது.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தில் இரண்டு நூலகங்கள் இருக்கு ஆனால் இரண்டு நூலகமே இப்போது மூடப்பட்டு இருக்கிறது.

1. முதல்நூலகம்

விளாச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பின்பு  கிளை நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை பல ஆண்டுகளுக்கு முன்பே சேதம் அடைந்து. அந்த கட்டிடத்தை அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் 2006-2007யில் நூலக கட்டிடம் மராமத்து செய்தல் ரூபாய் 25000. மதிப்பீட்டில் அப்போது ஊராட்சி மன்ற தலைவராக இருந்த மரகதவல்லி அவர்களால் கட்டடம் மறுசீரமைக்கப்பட்டது. மறுபடியும் இந்த கட்டிடத்தில் மேற்க்கூரை மிகவும் சேதம் அடைந்து விட்டதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நூலகம் மூடப்பட்டு விட்டது. நூலகத்தில் இருந்த சிறிது புத்தகங்களை எடுத்து வாடக கட்டடத்தில்  நூலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


2. இரண்டாம் நூலகம்.

விளாச்சேரி மொட்ட மலையில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் M.நெடுஞ்செழியன் அவர்களின் வீட்டின் அருகில்  நூலகம் உள்ளது. இந்த நூலகம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு தான் உள்ளது நூலக கட்டிடம் நன்றாக தான் உள்ளது ஏன் மூடப்பட்டு உள்ளது என்று தெரியவில்லை. இந்த நூலக கட்டிடம் *மாவட்ட ஆட்சியர்* விருப்ப நிதியின் மூலம் நிதி பெறப்பட்டு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நூலகம் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு அற்ற நிலையில் தான் உள்ளது. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களின் நிலைமை எலி கடித்து கரையான் அரித்து புத்தகங்கள் சேதமாகி கொண்டு இருக்கிறது .


எங்க ஊர் விளாச்சேரியில் இருக்கும் நூலகங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து இடிந்த நூலக கட்டிடத்தை மறு சீரமைக்கும் படியும் அல்லது புதிதாக கட்டடம் கட்டுவதற்கு ஆய்வு செய்யும் படியும், மற்றும் மொட்ட மலையில் உள்ள நூலக கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடும் படியும் விளாச்சேரி உள்ள *சமூக ஆர்வலர் S.சதிஷ்குமார்* கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad