மதுரையில், போக்குவரத்து சீர் செய்வது குறித்து ஆலோசணைக் கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 21 November 2023

மதுரையில், போக்குவரத்து சீர் செய்வது குறித்து ஆலோசணைக் கூட்டம்.


மதுரை மாநகராட்சி நான்கு மாசி வீதிகள் மற்றும் ஆவணி மூல வீதிகளில் போக்குவரத்து சீர் செய்வது குறித்து வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம், ஆணையாளர் லி.மதுபாலன் தலைமையில் நடைபெற்றது. 

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில், மதுரை நான்கு மாசி வீதிகள் மற்றும் ஆவணி மூல வீதிகளில் போக்குவரத்து சீர் செய்வது குறித்து  வர்த்தக சங்க பிரதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் ஆணையாளர் லி.மதுபாலன்,  தலைமையில்  நடைபெற்றது.    இக்கூட்டத்தில், காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) குமார்  தலைமைப்பொறியாளர் ரூபன் சுரேஷ் கண்காணிப்பு பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் சரவணன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மதுரை மாநகரம் மிக பழமையான தொன்மையான கோவில் நகரமாகும்.  மதுரை மாநகரத்தில் மிகவும் உலக பிரசித்தி பெற்ற கோவிலான அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோவில், மாரியம்மன் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம், அழகர்கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  தினசரி மதுரை மாநகருக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.  மதுரைக்கு வரும் சுற்றுலா நபர்கள் மதுரையின் பாரம்பரிய இடங்கள் , நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.  இதனால், மதுரை மாநகரில் உள்ள நான்கு மாசிவீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகளில் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்வதால், மதுரை மாநகர வீதிகளில்  வாகன நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.   


இதனை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தை சீர்செய்து பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல்  நடந்து செல்லவும், வாகனங்கள் எளிதாக வந்து செல்வதற்காக நான்கு மாசி வீதிகள் மற்றும் ஆவணி மூல வீதிகளில் உள்ள பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளுவதற்காக கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.  அதன்படி, ஆணையாளர் தலைமையில் அனைத்து வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் தங்களுடைய கருத்துக்கள் குறித்து ஆலோசனைகளை தெரிவித்தனர். 


இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் படி, இனி வருங்காலங்களில் போக்குவரத்தை சீர்செய்வது குறித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஜெகதீசன்,  மதுரை லாரி உரிமையாளர்கள் சங்கம்  மாதவன், வெங்காய வியாபரரிகள் சங்கம்  முகமது இஸ்மாயில், நேதாஜி ரோடு வியாபாரிகள் சங்கம் அலாவுதீன்  தமிழ்நாடு பைப் டிரேடர்ஸ் சங்கம் ஷாகுல் ஹமீது,  மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கம் கணேசன் உட்பட பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகள் உட்பட  மாநகராட்சி அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad