பாலமேட்டில், மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 30 November 2023

பாலமேட்டில், மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


மதுரை மாவட்டம், பாலமேடு கீர்த்தனா அரங்கத்தில், மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், வருவாய் கோட்டாட்சியர் சாலினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கருப்பையா, கமலக் கண்ணன், துணை கண்காணிப்பாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் டாக்டர் பார்த்திபன் வரவேற்றார். 


இந்த நிகழ்ச்சியில், பாலமேடு அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, தீண்டாமை, மது ஒழிப்பு, சமூக நீதி, போதை தடுப்பு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நீதிகுழுமம் உறுப்பினர் பாண்டியராஜா, பாலமேடு பேரூராட்சித் தலைவர் சுமதி பாண்டியராஜன், துணைத்தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் கீதா, சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண பாண்டி, முருகேசன், மற்றும் பாலமேடு கிராம பொது மாளிகை சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட காவல்துறை, பேரூராட்சி துறை, வருவாய் துறை, கல்வி துறை அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில், சமூக ஆர்வலர் கேசவராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad