சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சூரசம்கார விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 11 November 2023

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சூரசம்கார விழா.


மதுரை மாவட்டம சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள இந்து அறநிலை ஆட்சி துறைக்கு சொந்தமான அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சூரசம்கார விழா வருகிற 18-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. 

இவ்விழாவை முன்னிட்டு வருகிற 13ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம் நடந்து காலை 7 மணியளவில் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இரண்டு பக்தர்கள் கோவிலில் தங்கி இருந்து கந்தசஷ்டி விரதம் இருந்து வருவார்கள். தினசரி காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. தினசரி ஆன்மீக சொற்பொழிவு, சிவனடியார் பக்தி பஜனை நடைபெறும். வருகிற 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் உலக நன்மைக்காக குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது.


18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு மேல் அன்னை பராசக்தி இடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்று, இதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் முன்பாக மைதானத்தில் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு அன்னதானம் வழங்கப்படும். 19 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் பாவாடை தரிசனம், மாலை ஆறு மணிக்கு மேல் திருக்கல்யாணம், இரவு 7 மணிக்கு இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், பிரதோஷ கமிட்டி மற்றும் மெய் அன்பர்கள் செய்து வருகின்றனர்.


மதுரை அருகே சோழவந்தான் சிவன் ஆலயத்தில் கந்த சஷ்டி முன்னிட்டு இம்மாதம் 13ம் தேதி முதல் கந்தசஷ்டி அபிஷேகம் மாலை 6 மணிக்கு நடைபெறும். இக்கோயில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு பக்தர்கள் சார்பில், கந்த சஷ்டி அபிஷேகமும் இம்மாதம் 12ஆம் தேதி கந்த சஷ்டி அபிஷேகமும் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்னப் பாவாடை பூஜையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம் .வி.எம். மணி, கோவில் தக்கார் இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலய பணியாளர் செய்து வருகின்றனர்.


சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா


சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் குருவார பிரதோஷ விழா நடந்தது.சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில் நடந்த  பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது, இதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவிலில் வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவ என்று சிவபுராணம் பாடி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது. 


விழாவில் எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமையில்,மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் எம் வி எம் குழுமத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad