ரேஷன் கடைகளை ஆய்வு செய்த பா. ஜ. க மகளிரணியினர்; மதுரையில் பரபரப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 24 November 2023

ரேஷன் கடைகளை ஆய்வு செய்த பா. ஜ. க மகளிரணியினர்; மதுரையில் பரபரப்பு.


மதுரையில் ரேஷன் கடைகளில், பொருட்கள் முறையாக வழங்க படுவதில்லை. பொருட்களின் இருப்பு விபரங்களை பொது மக்களுக்கு தெரியும்படி எழுதி வைப்பதில்லை. காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை கடைகளை திறந்து வைப்பது இல்லை. ஆளும் கட்சியினர்கள் கடைக்குள் அமர்ந்து கொள்கிறார்கள். 

புகார் பெட்டி இல்லை போன்ற பல்வேறு முறைகேடுகள் விதி மீறல்களை களைய வேண்டுமெனவும் விதிமுறை மீறும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த திங்கள் கிழமை நடந்த கலெக்டர் குறை தீர்க்கும் நாளன்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க வினர் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். நான்கு நாட்களாகியும் ,அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லையென தெரிகிறது. 


ஆகவே, நேற்று பா. ஜ. க மகளிரணி மாவட்ட தலைவர். ஒம் சக்தி தனலட்சுமி, தாமரை சேவகன் குழு ஒருங்கிணைப்பாளர் வக்கீல். முத்துக்குமார், பொருளாளர். செல்விகிருஷ்ணன், மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலெக்டரை நேரில் சந்திக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் இல்லை. மாவட்ட வழங்கல் அலுவலரும், குடிமை பொருள் வடக்கு தாசில்தாரும் அறைகளில் இல்லை. இதனால், மகளிரணியினர் கலெக்டர் ஆபீஸ் முன்பு உள்ள ரேஷன் கடைக்கு சென்றனர். அங்கிருந்த விற்பனையாளரிடம் என்னென்ன பொருட்கள் விநியோகம் செய்யபடுகிறது. இருப்பில் இல்லாத பொருட்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர். 


அவற்றை பொது மக்களின் பார்வையில் படும்படி எழுதி வைக்குமாறு கூறினர். புகார் பெட்டியை எங்கே என்று விற்பனையாளரிடம் கேட்ட்டனர். புகார் பெட்டி உபயோகமற்ற நிலையில் இருப்பதாக விற்பனையாளர் கூறினார். புகார் பெட்டியை பார்த்தே ஆக வேண்டுமென பா. ஜ. க வினர் விடாப் பிடியாக இருந்தனர். அவ்வழியே சென்ற பொது மக்கள் அனைவரும் ரேஷன் கடை முன்பு கூடி விட்டனர். வேறு வழியில்லாமல் விற்பனையாளர் புகார் பெட்டியை வெளியே எடுத்து வந்தார். துருப்பிடித்த நிலையில் மிகவும் இத்து போயிருந்த அந்த புகார் பெட்டியை பொது மக்கள் அதிசயமாக பார்த்தனர். 


இதுகுறித்து ,பா. ஜ. க மகளிரணி தலைவர். ஓம்சக்தி. தனலட்சுமி கூறுகையில்:- ரேஷன் கடை முறைகேடுகளை களைய கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து நான்கு நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. கலெக்டர் உட்பட அதிகாரிகள் அனைவரையும் நேரில் பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. கடை நிலை பணியாளர்கள் பதில் சொல்ல தயங்குகிறார்கள். ஆகவே ,நாங்களே ரேஷன் கடைகளுக்கு ஆய்வு சென்று குறைகள் மற்றும் முறைகேடுகளை களைய வேண்டுமென, விற்பனையாளர்களுக்கு அறிவுரை கூறினோம். இதே நிலை தொடர்ந்தால், உரிமைகளை பெறுவதற்காக பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad