மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, பொட்டுலுபட்டி காந்திஜி அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் முன்னாள் பாரத பிரதமர் நேரு பிறந்த நாள் விழா குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கி நேரு படத்திற்கு மாலை அணிவித்தார். கல்வி குழு தலைவர் பொறியாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பால சரவணன் இனிப்பு வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் எஸ்தர் டார்த்தி சுதா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment