கட்சி நிர்வாகிகளுக்கு பிராய்லர் கோழி வழங்கிய அ தி மு க ஒன்றிய செயலாளர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 11 November 2023

கட்சி நிர்வாகிகளுக்கு பிராய்லர் கோழி வழங்கிய அ தி மு க ஒன்றிய செயலாளர்.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அதிமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் கல்லணை ரவிச்சந்திரன் ஆவார். ஏற்கனவே அலங்காநல்லூர் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது ஒருங்கிணைந்த அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்து வருகிறார். இவர் அதிமுக ஆளுங்கட்சியாக  இருந்தபோது ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களையும் தற்பொழுது  தற்பொழுது எதிர்க்கட்சியாக இருந்து வருகிற நிலையிலும் வேஷ்டி சட்டை ரொக்க பரிசு பொருட்களை வழங்கி அதிமுக கிளை நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவார். 

இந்த நிலையில் தற்பொழுது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக அதிமுக கிளை நிர்வாகிகளுக்கு இரண்டு கிலோ எடை அளவிலான பிராய்லர் கோழி  வழங்கி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வு அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad