திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ஆய்வு நடத்தினார், நுகர்வோர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 22 November 2023

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ஆய்வு நடத்தினார், நுகர்வோர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தின் மூலமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட வேளாண் விளை பொருட்களுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் பங்கேற்பின் மூலம் இ-நாம் திட்டத்தின் கீழ் அதிகபட்ச விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத னால் விவசாயிகள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மற்றும் திருமங்கலம் உழவர் சந்தை ஆகியவற்றை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் திடீர் ஆய்வு செய்தார்.


அப்போது இத்திட்டம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டதுடன் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் கூடுதலாக ஒரு கிட்டங்கி அமைத்திட இட வசதி உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் இ-நாம் திட்டத் தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட உரிய அறிவுரை வழங்கினார்.


மேலும், திருமங்கலம் உழவர் சந்தையினை ஆய்வு செய்த இயக்குநர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய் ததுடன் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களிடம் சந்தை யின் அடிப்படை வசதிகள் மற்றும் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா எனவும் கேட்டறிந் தார். ஆய்வின்போது வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad