குழாய்களை பதிக்க மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டும் போது பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு சீர் செய்யததால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 25 November 2023

குழாய்களை பதிக்க மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டும் போது பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு சீர் செய்யததால் பொதுமக்கள் அவதி.


மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெரு, சௌபாக்கிய விநாயகர் கோயில் தெருக்களில் (வார்டு எண் 36, 37), குழாய்களை பதிக்க மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டும் போது பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு சீர் செய்யததால், வீரவாஞ்சி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லையாம். ஆகவே, பொதுமக்கள் தனியார் குடிநீர் லாரிகளில், தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad