திருமங்கலம் அருகே தண்டோரா போட்டு அண்டாவில் கிடைத்த 23 பவுன் நகைகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 26 November 2023

திருமங்கலம் அருகே தண்டோரா போட்டு அண்டாவில் கிடைத்த 23 பவுன் நகைகள்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டி சேர்ந்தவர் ராகவன் 50 பம்ப்ஆப்ரேட்டர். இவரது மனைவி பெயர் பாண்டியம்மாள் நேற்று முன்தினம் இருவரும் வேலை தொடர்பாக வெளியில் சென்று விட்டனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு இருந்தது பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள்  21 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக சிந்துபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் தெரிந்து வந்த போலீசார் பட்டப் பகலில் கிராமத்திற்குள் வெளியாட்க்கள் புகுந்து திருட வாய்ப்பு குறைவு எனவே உள்ளூர் காரர்கள் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் சிந்துபட்டி போலீசார் விசாரித்தனர். கிராமப் பெரியோர்கள் உள்ளூரில் திருடிய வரை கைது செய்தால் தங்கள் ஊருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் எனவே இதற்காக கிராமத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வழக்கமாக கடைபிடிக்கும் முறையை கையாள வேண்டும் எனக் கூறி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பேப்பர் கவர் கொடுத்து இரவில் மந்தையில் ஒரு பெரிய அண்டாவை வைத்து அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு யாரேனும் திடீர் என்று திருடியிருந்தால் கவருக்குள் நகையை பணத்தைக் கொண்டு வந்து அண்டாவிற்குள் போட்டு விட வேண்டும் என தண்டோரா போட்டு பேசி முடிவு செய்து இது தொடர்பான விவரங்களை கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் அறிவித்தனர். 


அதன்படி இரவு எட்டு மணிக்கு கிராம பள்ளிக்கூட அறையில் இரண்டு அண்டாக்களை வைத்தனர் பின்ன மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீன் விளக்குகள் எரிய விடப்பட்டு அண்டாவில் இருந்த கவர்களை பிரித்துப் பார்த்ததில் திருடிய நபர் நகைகளை கவரில் வைத்து அண்டாவிற்குள் போட்டு சென்றது தெரிய வந்தது ஆனால் காணாமல் போன 26 பவுன் நகைகளில் 23 பவுன் நகைகள் மட்டுமே இருந்துள்ளது ரொக்க பணம் எதுவும் இல்லை இது தொடர்ந்து நகைகள் கிராம பொதுமக்கள் போலீசார்ரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன நகைகளை மீட்க தண்டோரா போட்டு ஊருக்கு நடுவில் அண்டா வைத்து பழங்காலத்து நடைமுறைகளை கையாண்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இன்னமும் பழைய மரபுகள் மாறாமல் இருப்பதற்கு இந்த ஒரு சம்பவமே எடுத்துக்காட்டு என்று ஊர் பொதுமக்கள் அனைவரும் கூறினர். 

No comments:

Post a Comment

Post Top Ad