மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் நவராத்திரி விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி திருக்கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நவராத்திரி நிறைவு விழாவில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பிரணவ் நடன நாட்டிய மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோவில் நிர்வாக அதிகாரி இளமதி துவக்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட நடன நாட்டிய பள்ளி மாணவிகள் கௌன பாலமுருகன் ஆலோசனைப்படி தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை ஆலய பணியாளர்கள் கணக்கர் பூபதி, வசந்த் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.

No comments:
Post a Comment