மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் பள்ளியில் தெற்கு மாவட்ட மாணவரனி அமைப்பாளர் பாண்டி முருகன் தலைமையில், துணை அமைப்பாளர்கள் மருது பாண்டியன், ஜெய்லாணி, அவனி கிழக்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் தர்மபிரபு மற்றும் பாலையம்பட்டி ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ரமேஷ்பாபு தலைமையில் தலைமை ஆசிரியர் ஜான் கண்ணன் முன்னிலையில் மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இதில், தலா இரு போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு கேடயம், பதக்கம் வழங்கப்பட்டது, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவனி கிழக்கு பகுதி அவைத் தலைவர் கணேசன், பிரவீன் குமார் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், திமுக வட்ட திமுக செயலாளர்கள் சரத்குமார், போஸ் மற்றும் பகுதி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment