அதிமுக 52வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் நேற்று பொது கூட்டம் நடைபெற்றது, கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் கழக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சங்கரன்கோவில் இருந்து கோவில்பட்டியில் தனியார் கல்லூரியில் இரவு தங்கி அதிகாலை ஐந்து மணி அளவில் சாலை மாற்றமாக சேலம் புறப்பட்டார் இதனைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதி மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு ஏற்பாட்டினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆளுயர மாலை அணிவித்து வெற்றி வாளை பரிசாக அளித்தனர் இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு உற்சாக மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

No comments:
Post a Comment