மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 22 October 2023

மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர்.


தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி, சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் Non - ஒலிம்பிக் கமிட்டி நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் 11 வகையான போட்டிகள் நடைபெற்றது. 

இதில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, ஒற்றை வாள் வீச்சு, வேல் கம்பு வீச்சு, மகுடு வீச்சு குத்துவரிசை பல வகையான போட்டிகள் இருந்தன. இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் காங்கிரஸ் கட்சியின் நகர் செயலாளர் செளந்தர் பாண்டி, சிலம்பம் தலைவர் முகமது சிராஜ், செயலாளர்கள் தியாகு நாகராஜ், பாலமுருகன், சிலம்பம் கமிட்டி தலைவர் அர்ஜுன் P.கருப்பசாமி,  சுந்தரபாண்டியன், சத்தியபிரகாஷ், K.பாக்கியராஜ், சிலம்பம் மதுரை மாவட்ட செயலாளர் சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா செந்தில் முருகன், அமுதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad