அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 23 September 2023

அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள், வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு, பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், தலைமை தாங்கி, சைக்கிள்களை வழங்கி தொடங்கி வைத்தார். 


திமுக ஒன்றியச் செயலாளர் தனராஜ், நகர செயலாளர் ரகுபதி,பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் ரமணி வாசன் , சேஷாஜெயராம், முன்னாள் கவுன்சிலர் வேலு பிருந்தாவன், இளைஞரணி செயலாளர் பிரதாப், மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவிகள்,திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


முடிவில், உதவி தலைமை ஆசிரியை பொய்கை நன்றி கூறினார். இதில் பிளஸ் டூ படிக்கும் 199மாணவிகள் சைக்கிள் வாங்கி பயன் பெற்றனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad