சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் வார்டு குழுக் கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டம் ,ஆறு மையங்களில் நடைபெற்றது 1 மற்றும் 2வது வார்டுக்கு பேட்டை குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு, வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மாள், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் செல்வி சதீஷ்குமார் வரவேற்றார். சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசி உறுதி மொழி வாசித்தார்.
கூட்டத்தில், கலந்து கொண்ட வார்டு பகுதி மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த வார்டுகளில், ரேஷன் கடை அமைக்க வேண்டும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முன்னதாக, பணியாளர் செல்வம் வரவேற்றார். கூட்டம் முடிவில் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் பேரூராட்சி நோட்புக்கில் தீர்மானமாக ஏற்றப்பட்டது.
இது குறித்து அதிகாரி தரப்பில் கூறும் போது: பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். கூட்டத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது வார்டில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment