மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை வடகரை பகுதிக்கு ரூ.291.37 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், மண்டலம் 2 வார்டு எண்.33 கே.கே.நகர் பிரதான சாலை (அப்பல்லோ மருத்துவமனை அருகில்) பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்தும், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1295.76 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையில் இருந்து மதுரை மாநகராட்சியில் 100 வார்டு பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கு குழாய்கள் மற்றும் மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்கீழ் மாட்டுத்தாவணி மெயின் ரோடு கே.கே.நகர் பகுதியில் 12 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியின் நிறைவுப்பணிகளையும், வண்டியூர் கண்மாய் அழகுப் படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் என, மதுரை மாநகராட்சியின் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மணிமேலை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாமிற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, நகராட்சி நிர்வாக இயக்குநர், மேயர், ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, துணை ஆணையாளர்கள் முஜிபுர் ரகுமான், தயாநிதி , தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர்கள் வரலெட்சுமி. மனோகரன், நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) காமராஜ், உதவிப் பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர். அமர்தீப் மயிலேறிநாதன், சந்தனம், மாமன்றஉறுப்பினர் மாலதி மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment