திருமங்கலம் அருகே ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 22 July 2023

திருமங்கலம் அருகே ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் திருவிழா நடைபெற்றது.


ஆடி மாதம் பிறந்து விட்டாலே அனைத்து அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கூல் காட்சி அம்மனுக்கு படைப்பார்கள். அதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் அமைந்துள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ரகுபதி கொண்ட அம்மாள் ஸ்ரீ கிருஷ்ண கொண்ட அம்மா திருக்கோவிலில் முப்பதாயிரம் வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் இங்கே திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடத்தவும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் இக்கோவிலில் இது ஐதீகமாக கருதப்பட்டு ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad