மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பி கே என் பெண்கள் மேல்நிலைப் பள்ளி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருமங்கலம் நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்துகொண்டு பள்ளி மாணவியர்களுக்கு சுமார் 679விலை இல்லா மிதி வண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், நகர்மன்ற செயலாளர் ஸ்ரீதர், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜஸ்டின், சின்னச்சாமி, வீரக்குமார், ஆசார், ரவிக்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருமங்கலம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment