தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, நிர்வாகி செந்தில்குமார் மற்றும் திருப்பணி குழு, மற்றும் விழாக்குழு செய்திருந்தனர். ஆடி சுவாதி: நரசிம்மர், கருடாழ்வார் சிறப்பு ஹோமம்: மதுரை அண்ணாநகர், மேலமடை, தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெரு அருகே அமைந்துள்ள அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் கோவிலில், ஜூலை 26 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி அளவில் ஆடி சுவாதி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள கருடாழ்வார் மற்றும் நரசிம்மருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து, கருடாழ்வார் மற்றும் நரசிம்மருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அச்சனை வழிபாடுகள் நடைபெறும். முன்னதாக, கோவிலில் சுதர்சன ஹோமமும், அதைத் தொடர்ந்து, ருத்ர ஹோமம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆன்மீக குழுவினர் செய்தி வருகின்றனர். இத் திருக்கோவிலில், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று காலை 9 மணி அளவில், நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் நடந்து வருகிறது.
இதை அடுத்து, நரசிம்மருக்கு பானகம் மற்றும் பிரசாதங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு தீபாரதம் நடைபெறும், இதை அடுத்து பக்தர்களுக்கு துளசி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment