மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் வேண்டி 5 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 3 மனுக்களும், குடிநீர் இணைப்பு வேண்டி 4 மனுக்களும், சாலை வசதி வேண்டி 2 மனுக்களும், பாதாளச்சாக்கடை இணைப்பு வேண்டி 4 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கை வேண்டி 1 மனுவும் என, மொத்தம் 20 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது.
தொடர்ந்து, மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளான வார்டு எண்.4 நட்சத்திர நகர் 4வது தெரு, முத்தமிழ் நகர் 3 மற்றும் 4வது தெருக்கள் மற்றும் வார்டு எண்.13 கங்கை தெரு, ராமகிருஷ்ணா நகர், உச்சபரம்பு மேடு ஆகிய பகுதிகளில் சீரமைக்கப்பட்ட மற்றும் புதிய சாலைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு மேற்கொண்டு, வருங்காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப் படும் சாலைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என, மேயர் தெரிவித்தார்கள். இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர் வாசுகி துணை ஆணையாளர் தயாநிதி, உதவி ஆணையாளர் காளிமுத்தன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், உதவிப் பொறியாளர்கள் மணியன், ஆரோக்கியசேவியர், சோலைமலை, உதவி வருவாய் அலுவலர் இராஜாராம், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment