

குப்பைகளை நாய்கள் கிளறுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசப்படுகிறது. காற்று வீசும்போது பறக்கும் குப்பையால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே விமான நிலைய சாலை செல்லும் சாலையில் சாலையோரம் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பை மேடாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த குப்பைகளால் அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்காக வரும் நாய், பன்றி, மாடுகள் போன்றவைகளுக்குள் ஏற்படும் சண்டையால் அவைகள் சாலைகளில் ஓடிவருகின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அந்தப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்கவும், குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பைகளை வாங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment