கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய கிராம குளம்; தூய்மையாக கிராம மக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 4 July 2023

கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய கிராம குளம்; தூய்மையாக கிராம மக்கள் கோரிக்கை.


திருமங்கலம் ரயில்வே கேட்டை தாண்டி அதனைச் சுற்றியுள்ள கற்பகநகர், காமராஜபுரம் ஆகிய பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சின்ன வடகரை கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே தேங்குகிறது. குளத்தில் அருகே குப்பை கொட்டப்படுவதாலும் கழிவு நீர் அருகே தேங்குவதாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நிலத்தடி நீரில் குளத்தில் தேங்கும் கழிவு நீரானது அருகே உள்ள போர்வெல் மூலம் உறிஞ்சப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி வழியாக ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 


தற்போது கழிவுநீர் அருகே தங்குவதால் குடிக்க பயன்படுத்தப்படும் நீர் கலங்களாக வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது பொதுமக்கள் குடிப்பதற்கு அருகில் கரிசல்பட்டி ஊராட்சியில் இருந்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுவருக்கு நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கூறியதாவது, திருமங்கலம் பகுதியில் இரண்டு  மூன்று தெருக்களில் உள்ள கழிவு நீர் சின்ன வடகரை கிராமத்திற்கு செல்கிறது. அதிகப்படியாக வடகரை கிராமப் பகுதியில் உள்ள பாண்டியன் நகர் கழிவுநீர் தான் அப்பகுதிக்கு செல்கிறது. திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து செல்லும் கழிவு நீரை அகற்றுவதற்கு கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 


மேலும் இந்த கழுகு நீரில் மறுசுழற்சி செய்வதற்காக அவசியமும் இல்லை. தொழிற்சாலை கழிவுகள் ஏதேனும் இருந்தால் மனுசுளர்ச்சி செய்யலாம். சாதாரணமாக சாக்கடை கழிவுநீர் தான் என தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad