மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட உசிலம்பட்டி பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் கைது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 28 July 2023

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட உசிலம்பட்டி பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் உதயக்குமார்., இவர் கடந்த 20ஆம் தேதி ஆடி அம்மாவாசையை முன்னிட்டு சாப்டூர் வாழைத்தோப்பு பகுதி வழியாக சதுரகிரி மலைக்கு செல்ல வாழைத்தோப்பு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சதுரகிரி மலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


இது தொடர்பாக உதயக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சாப்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்., இந்நிலையில் உசிலம்பட்டி பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் என்பவர்., தேடப்பட்டு வந்த இருசக்கர வாகனத்தை திருடியும்., வாகனத்தின் வண்ணம் மற்றும் நம்பர் பிளேட் உள்ளிட்ட அடையாளத்தை மறைத்து வாகனத்தை ஓட்டி வந்ததைக் கண்டறிந்த போலிசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆடி அமாவாசையை முன்னிட்டு சாமி கும்பிட சென்ற நபரின் இருசக்கர வாகனத்தை தேசிய கட்சியான பாஜகவை சேர்ந்த பிரமுகர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad