மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தற்போது ஒரு வாரமாக இரவு பகல் நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பகல் நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.


இதனால் பள்ளி மற்றும் கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் பகல் நேரங்களில் மிக குறைந்த மின்னழுத்தமே பிரச்சினை ஏற்படுகிறது. வீட்டில் இயக்கப்படும் மோட்டார், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் ஆகியவை செயல்படுவதில்லை. இதனால் வெளியே செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடை மற்றும் வீடுகளிலும் பல்புகள் அவ்வப்போது மினிட்டாம்புச்சியை மின்னுவது போல் விட்டுவிட்டு வருகிறது.
இதனால் பல்புகள் செயலிழந்து விடுகிறது. எனவே நகர்பகுதியில் அறிவிக்காத மின்வெட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். குறைந்த அழுத்த மின்சாரம் வருவதை சரி செய்து தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment