முதற்கட்டமாக 100 மில்லி மீட்டர் அளவுக்கு மக்கும் கழிவுகள் பிரிக்கப்பட்டு அவற்றை அரைத்து உரமாக வெளியேற்றப்படுகிறது. அந்த உரத்தை குவித்து வைத்து 45 நாட்களுக்கு ஈரப் பதத்துடன் தண்ணீர் தெளித்து பதப்படுத்தப்படுகிறது. அதன்பின் 30 மில்லி மீட்டர் அளவுள்ள கழிவுகள் இயந்திரங்கள் மூலமாக குறைந்தபட்சம் நாலு மில்லி மீட்டர் அளவுக்கு இயந்திரம் உதவியுடன் பொடியாக மாற்றி இயற்கை உரமாக்கப் படுகிறது. மேலும் குப்பை கிடங்கில் வாழை இலை, தோட்ட கழிவுகள், மா இலைகள் போன்றவற்றை அரைத்து உலர வைத்து அதனை இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.


இதனால் 16 டன் குப்பை களை 10 டன் மக்கும் குப்பைகளாக வருவதை தொடர்ந்து மக்கும் குப்பை களை இயற்கை உரம் ஆக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரம் மூலமாக சமப்படுத்தி பண்டலாக மாற்றி சிமெண்ட் தொழிற் சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தொடங்கி வைத்தார்.
மேலும் 10 டன் வரை தயாரிக்கப்படும் இலவச உரங்களை விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், அமுதா, சரவணன், சங்கீதா, சுகாதார அதிகாரி சண்முகநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment