

இக்கூட்டத்தில் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திலிருந்து திறந்து வைக்கும் இடம் வரை வழி நெடுகில் திமுக தொண்டர்கள் அனைவரும் வெகு திரளாக நின்று வரவேற்க வேண்டும் என்று கூறினார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற செயல்பாடு உடன் அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என்று கூறினார்.
மேலும் திருமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி தேவையில்லாமல் அவதூறாக பேசி வருகிறார் அங்கே அவர்கள் செங்கல் மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் . அனைத்து ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் நாகராஜன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகர தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன், கப்பலூர் சந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா அதியமான் முத்துராமலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment