ஓராண்டில் 5 கோடிக்கு வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து சாதனை கடந்த ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கு மேல் ஏலம் நடத்தி சாதனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 11 July 2023

ஓராண்டில் 5 கோடிக்கு வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து சாதனை கடந்த ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கு மேல் ஏலம் நடத்தி சாதனை.


திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம்  முதற்கொண்டு வேளாண் விளைபொருட்களின் ஏலம் நடைபெறுகிறது. இப்பகுதியில் விளையும் அனைத்து வேளாண் விளைபொருள்களையும் விவசாயிகள் ஆர்வமுடன் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இந்தளவில் தன்னார்வத்துடன் விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றதன் விளைவாக ஒரே வருடத்தில் 5 கோடிக்கு ஏலம் நடத்தி சாதனை எட்டப்பட்டது. 

மேலும் கடந்த ஒரே மாதத்தில்  ஒரு கோடிக்கு ஏலம் நடத்தி சாதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று  (11/07/2023)  திருமங்கலம், குன்னத்தூர், சின்னபூலாம்பட்டி, கே.வெள்ளாங்குளம், உசிலம்பட்டி, பேரையூர், வெள்ளையாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த கிராமங்களைச் சேர்ந்த ஒன்பது விவசாயிகளின் 8283.45 கிலோ எள் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ  125 க்கும், குறைந்தபட்சமாக 120 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ  1003193 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும்  மீனாட்சிபுரம், கொல்லவீரன்பட்டி, தென்னமநல்லூர், உசிலம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த நான்கு விவசாயிகளின் 6095 கிலோ இருங்குசோளம் ஏலத்திற்கு வந்தது. 


அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ  40 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 243800 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் செங்கப்படை, உசிலம்பட்டி, உசிலம்பட்டி, செங்கப்படை ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஆறு விவசாயிகளின் 31022 கிலோ வரகு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 40 க்கும் குறைந்த பட்ச விலையாக 34.90 க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ 997725-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


மேலும் சின்னபூலாம்பட்டி மற்றும் குமாரம்பட்டி கிராமங்களை சேர்ந்த  இரு விவசாயிகளின் 8627 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 23 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ 198410 க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆக மொத்தம் இன்று  ஒரே நாளில் 54 டன் வேளாண் விளைபொருட்களை ஏலமிட்டு  ரூ 2443128 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

No comments:

Post a Comment

Post Top Ad