இதை தொடர்ந்து திருமங்கலம் யூனியன் நிர்வாகம் அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடத்தினை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியது. அதில் கப்பலூர் அருகே உச்சப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் போதுமான நிலம் இருந்தது தெரிய வந்தது. இந்த இடத்தில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி மற்றும் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகே 75 சென்ட் இடத்தில் புதிய யூனியன் அலுவலகம் அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.


அதன்படி அந்த இடமானது திருமங்கலம் பி.டி.ஓ. பெயருக்கு பெயர் மாற்றம் செயப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இடத்தை வருவாய் துறையினர் அளந்து கொடுத்தனர். இதனை தொடர்ந்து புதிய யூனியன் அலுவலகம் அமைய உள்ள இடத்தை தூய்மை செய்யும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள், தலைவர், கவுன்சிலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சீர் செய்த பின்பு கற்கள் ஊன்றி கம்பிவேலி போடப்பட்டு நிதி ஒதுக்கீடு வந்தவுடன் கட்டிடப் பணிகள் தொடங்கப்்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment