நமது நாட்டில் இன்றைய சூழ்நிலையில் அரசு வேலையாக இருந்தாலும் சரி வீடு கட்டுவதற்காக அப்ரூவல் வாங்குவதற்கும்,பள்ளி கல்லூரியில் சேர்வதற்கும் லஞ்சம் வாங்குகிறார்கள். இந்த லஞ்சம் இல்லா நாடாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த திலீப் யாதவ் ( 25) விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.


இவர் கடந்த ஐந்தாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 120 நாட்கள் நடைபயணமாக லஞ்சம் இல்லாத நாடு மற்றும் மாசு இல்லாத நாடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து ஆரம்பித்து இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணி கிராமத்தில் அவரை சந்தித்து கேட்ட பொழுது வந்தே மாதரம் வெல்டன் இந்தியா என்ற தாரக மந்திரத்தை கருத்தில் கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment