

மேலும் பள்ளி திறப்பதற்கு முன் பள்ளியில் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தல், மாணவர்களுக்கான வகுப்பாறைகளை ஆயத்தம் செய்தல் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆலோசனையின் படியும். நேரடி கண்காணிப்பின் படியும் சென்ற வாரம் முழுமைக்கும் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்வுக்கு முத்தாய்ப்பாக கிழக்கு ஒன்றியம் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கடையில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு (கிழக்கு ஒன்றியத்தைச் சார்ந்த பள்ளிகள்) சிறப்பு பரிசாக மிதிவண்டிகளை வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 867 பள்ளிகள் இன்று முதல் துவங்கப்படுகிறது. அரசு மற்றும்உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment