தற்போது சாலை வரி உயர்வு குறித்து தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பது உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. 5 சதவீதம் வரி உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ஆகும். அதேபோல் மோட்டார் வாகன வரியை உயர்த்தப் போவதாகவும் செய்தி வருகிறது. இந்த வரி உயர்வால் வாகனங்கள் விலை உயரும். தற்போைதய நிலவரப்படி 15 ஆண்டுக்கான சாலை வரியை வாகனங்களில் இருந்து 8 சவீதமாக வசூலிக்கப்படுகிறது. இனி இரு சக்கர வாகனங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் 10 சதவீத வரியும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வாகனங்களின் விலைக்கு ஏற்றபடி வரிகள் உயர்த்த படலாம்.


2022-23-ம் ஆண்டில் 14.77 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த வரி உயர்வால் லாரி வாடகை கட்டணம் உயரும். அதன் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியா வசிய பொருள்கள் கடுமை யாக உயர்ந்து மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். சாலை வரிக்கு அக்கறை காட்டும் முதலமைச்சர், நல்ல முறையில் சாலை அமைக்க முன்னுரிமை அளிப்பாரா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆகவே சாலை வரியை உயர்த்தும் முடிவை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment