14 கிலோ கஞ்சா பறிமுதல் மீண்டும் தலைதூக்கும் கஞ்சா விற்பனை போலீசார் தீவிர விசாரணை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 30 June 2023

14 கிலோ கஞ்சா பறிமுதல் மீண்டும் தலைதூக்கும் கஞ்சா விற்பனை போலீசார் தீவிர விசாரணை.


மதுரை மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. சமூக விரோதி கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க ேபாலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி சம்ப வத்தன்று தல்லாகுளம் போலீசார் புதுநத்தம் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். 


அப்போது அங்குள்ள ஓம்சக்தி கோவில் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். உடனே போலீசார் 2 பேரையும் விரட்டி பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணை யில் அவர்கள் ஆண்டிப்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்த விருமாண்டி(வயது52), மணியாரம்பட்டி கணேசன்(52) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மதுரை ஒபுளாபடித்துரை பகுதியில் மதிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர். 


அப்போது அங்கு கஞ்சா விற்ற அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் அர்ஜூன் என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad