சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி பெரும் திருவிழாவில், பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் ஸ்ரீமத் பரமானந்தா சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் .


பிரம்மா குமாரி அமிர்தா ஏற்றம் தரும் நேர்மறை மாற்றம் தியானம் அனுபவம் பற்றி சிறப்பு சொற்பொழிவாற்றினார். கோவில் செயல் அலுவலர் இளமதி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ வரவேற்றார். பிரம்மா குமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகமும், சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. முன்னாள் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் நன்றி கூறினார். முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment