திருமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் நெற்கதிரடிக்கும் களத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 16 June 2023

திருமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் நெற்கதிரடிக்கும் களத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிதாக கட்டப்பட்ட வரும் நெற்கதிர் அடிக்கும் களத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.


திருமங்கலம் தொகுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலம்பட்டி பகுதியில் அறுவடை செய்த நெற் பயிர்களை சாலையில் போட்டு கதிர் அடிப்பார்கள். இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர் இந்நிலையில் தங்கள் பகுதிக்கு நெற்கதிர் அடிக்கும் களம் புதிதாக கட்டித் தர வேண்டும் என திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இடம் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் புதிதாக நெற்கதிர் அடிக்கும் களம் அமைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நெற் பயிர்கள் அடிக்கும் களம் பணிகள் நடைபெற்று வருகிறது.


அதனை இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் யூனியன் சேர்மன் லதா ஜெகன் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad