தஞ்சை மாவட்டம் கொள்ளுகாது வட்டாட்சி கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சுந்தரராஜ். இவர் மதுரை திருமங்கலத்தில் உள்ள சிட்கோவில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை சரியில்லாததால் சுந்தரராஜ் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.


இது குறித்து அவரது அண்ணன் கோவிந்தராஜ், சுந்தரராஜின் நண்பர் மதன பிரகாஷிடம் தனது தம்பிக்கு வேறு ஒரு வேலை வாங்கித் தருமாறு கூறியிருந்தார். அதன்பேரில் சுந்தரராஜ் சேடப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த சுந்தரராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment