தூய்மை பணியாளர்களை கொண்டு மாபெரும் மனித வடிவில் ”முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்” உருவமாக்கும் நிகழ்வு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 10 June 2023

தூய்மை பணியாளர்களை கொண்டு மாபெரும் மனித வடிவில் ”முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்” உருவமாக்கும் நிகழ்வு.


மதுரை மாநகராட்சி உலக  சாதனையை நோக்கி  தூய்மை பணியாளர்களை கொண்டு மாபெரும்  மனித வடிவில்  ”முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின்” உருவமாக்கும்  நிகழ்வு  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  தலைமையில்  நடைபெற்றது. 
 

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில், மதுரை மாநகராட்சி மண்டலம் 2 ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், மேயர்  இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா,  ஆணையாளர் கே.ஜே.பிரவிண்குமார், ஆகியேரர் முன்னிலையில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன், தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மாபெரும் மனித வடிவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், உருவமாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழ்நாடு முதலமைச்சர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், நூற்றாண்டு விழாவினை வருடம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தன் ஒரு நிகழ்வாக உலக சாதனையை நோக்கி  மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு மாபெரும் மனித வடிவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், உருவப்படத்தை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.   முன்னதாக,  அமைச்சர்  தலைமையில் தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் தூய்மைக்கான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். 


மாபெரும் மனித வடிவில் முத்தமிழறிஞர் கலைஞர்  உருவமாக்கும் நிகழ்விற்காக டிரையும்ப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனைக்கான விருதினை, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் வழங்கினார்கள். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி திரு.பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா, துணை ஆணையாளர் முஜிபுர் ரகுமான், நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் வரலெட்சுமி காளிமுத்தன், திருமலை, சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் தூய்மைபணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad