மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் வருடாபிஷேகம் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது. பட்டர்கள் ஸ்ரீபாலாஜி, செந்தில் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்தது இதை தொடர்ந்து பூர்ணாஹூதி செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு மரக்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது.


உலக நன்மைக்காக சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது ஐந்துபேர்ஆண்டித்தேவர் வகையறா, எட்டூர் கிராம பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment