மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் ஆலயம் கும்பாபிஷேகம் விழா கடந்த 31. 5.2023 காலை மகா கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது. இதில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபூஜை ஆகியன நடைபெற்றன.


இன்று காலை 9 மணி அளவில் கோபுர கலசங்களுக்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர் கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு திருமங்கலம் சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம்மும் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம பொதுமக்கள் விழா கமிட்டியர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment