மதுரையில், கழிவு நீரேற்று நிலையத்தில், ஆணையாளர் ஆய்வு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 13 June 2023

மதுரையில், கழிவு நீரேற்று நிலையத்தில், ஆணையாளர் ஆய்வு.


மதுரை மாநகராட்சி பெத்தானியாபுரம்  கழிவுநீரேற்று நிலையத்தில் ஆணையாளர்  கே.ஜே.பிரவீண்குமார்,  ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் உள்ள  கழிவு நீரேற்று நிலையம் மற்றும் பாத்திமா நகர் பல்லவன்நகர் ஆகிய பகுதிகளில் தூய்மைப்பணிகள் குறித்து, ஆணையாளர் கே.ஜே. பிரவீண்குமார்,   ஆய்வு மேற்கொண்டார்.  


மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மாநகராட்சி மண்டலம் 2 பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், மின்மோட்டார்கள், கழிவுநீரேற்று தொட்டிகள் பாதுகாப்பு உபகரணங்கள் சுத்திகரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 



தொடர்ந்து, பெத்தானியாபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட பாத்திமா நகர், பல்லவன் நகர் மெயின் வீதி ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  இப்பகுதிகளில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், பொதுமக்கள் குப்பைகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை போடுமாறும், நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். 


இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் அரசு  நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் வரலெட்சுமி  மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் காமராஜ், சுப்புதாய், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் மல்லிகா, சுகாதார ஆய்வாளர் ஓம்சக்தி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad