இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டா நாயகனாக இருக்கக்கூடிய தல தோனி ரசிகராக மாறிய பாண்டி தோனியின் ஒரு ஆட்டம் விடாமல் பார்த்து வருவது வாகனம் ஓட்டும்போது ஆட்டம் நடந்தால் தனது நண்பரை வைத்து கமெண்டரி கேட்டு உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்வது போன்ற தீவிர ரசிகராக ஏரியாவில் வலம் வந்துள்ளார்.
இந்நிலையில் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த தோனி படம் வெளியாகிறது இந்த படத்தை கணக்கில் இல்லாத அளவிற்கு தினந்தோறும் படத்தை பார்க்கிறார் அதில் தோனி வாழ்க்கை வரலாறு தோனி மிகுந்த சிரமத்திற்கு இடையில் பில் கலெக்டராக வேலை பார்த்து உயரிய அந்தஸ்தை அடைவதை தனது மனதில் பதிய வைத்த பாண்டி இனி ஒருநாளும் கூலி வேலை பார்க்க கூடாது தல தோனி வழியில் நாமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பணம் நகைகளை அடகு வைத்து தனக்கே சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்கி இயக்குகிறார்.


இருந்தாலும் நாடி நரம்பு எல்லாம் தோனியின் ஞாபகங்கள் இருப்பதால் தனது வாகனத்தை முழுவதும் தோனியின் படம் ஒட்டி வண்டியின் முகப்புப் பக்கம் சிஎஸ்கே என எழுதி இருபுறமும் தோனியின் படத்தை ஒட்டி வலம் வருகிறார் நாளடைவில் இவருடைய வாகனம் மதுரையில் எங்கு வந்தாலும் இளைஞர் கூட்டம் ஒரு கூட்டம் வண்டியை பார்ப்பதற்கும் வண்டியில் முன்னின்று செல்பி எடுப்பதற்கும் கூடுகிறது.
மேலும் மேட்ச் நடக்கக்கூடிய நாட்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பகுதியை ரணகளம் ஆகும் வரை ஆட்டம் பாட்டம் பட்டாசு என கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவார். இது மட்டுமில்லாமல் தல தோணியை தன் நாயகனாக கருதிய பாண்டி தனக்கு வரும் வாடிக்கையாளரிடம் குறைந்த வாடகையில் வண்டி ஓட்டுவதால் தோனி ரசிகர் நியாயமாக வாடகை கேட்பதாக இவருக்கு தொடர்ந்து வாடகைக்கு எடுக்க வாடிக்கையாளர்கள் அதிகமாகி விட்டனர்.
இவரை சந்தித்த நாம் இதெல்லாம் எப்படி என கேட்டபோது மதுரைக்குரிய பாஷையில் பேச தொடங்கினார். இனி தோனி தாங்க எல்லாமே தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே தோனியை ஒரு பெரிய நாயகனாகவும் கடவுளாகவும் பார்க்கத் தொடங்கிவிட்டது தோனி விளையாடும் இடமெல்லாம் எங்கு பார்த்தாலும் மஞ்சள் படைபடையாக மக்கள் வாலிபர்கள், இளைஞிகள் என அனைவரும் ஆட்டம் பார்க்க செல்ல தொடங்குகின்றனர் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் தோனியை ரசித்து வருகின்றனர் இனி எல்லாமே தோனி தான் அவர் எங்கு சென்றாலும் இந்தியாவின் கிரிக்கெட் டீம் வழி நடத்துவதாக இருக்க வேண்டும் என்றார்
தோனியின் நல்ல ரசிகனாக வலம் வர வேண்டும் என்று நினைத்து என் வாகனத்தை இவ்வாறு மாற்றினேன் ஆனால் தற்போது எனக்கென நிறைய ரசிகர்கள் நான் எங்கு சென்றாலும் என்னோடும் என் வாகனத்தோடு நின்று செல்பி எடுத்து வருகின்றனர் இதெல்லாம் பார்க்கையில் தல தோனியின் பெருமை தெரிகிறது. தொடர்ந்து பேசிய பாண்டி தனக்கு ஒரே இலட்சியம் தல தோணியை நேரில் பார்க்க வேண்டும் என்று அது இந்த பேட்டியில் நிறைவேறும் என நினைக்கின்றேன் என முடித்தார்.
No comments:
Post a Comment